×

தெருவோர குழந்தைகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியை நீதிபதி அறிமுகப்படுத்தினார்

தண்டையார்பேட்டை: சென்னையில் நடக்கவுள்ள தெருவோர குழந்தைகளுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணியை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் அறிமுகப்படுத்தி வைத்தார். தெருவோர குழந்தைகளுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முதல்முறையாக இங்கிலாந்தில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றது. அதில் தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவில் உள்ள கருணாலயா தொண்டு நிறுவனத்தில் வசிக்கும் தெருவோர குழந்தைகள் இந்தியா சார்பில் கலந்துகொண்டு உலகக் கோப்பையை வென்று அசத்தினர். இந்தநிலையில் 2023ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா உள்ளிட்ட மொத்தம் 15 நாடுகள் கலந்து கொள்கின்றன.

இதில் இந்தியா சார்பில் கருணாலயா தொண்டு நிறுவனத்தில் பராமரிக்கப்பட்டு வரும் தெருவோர குழந்தைகள் அணியின் 8 பேரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் பிரான்ஸ், கருணாலயா தொண்டு நிறுவன செயலாளர் பால் சுந்தர் சிங் ஆகியோர் குழந்தைகளை அறிமுகப்படுத்தி வைத்தனர். இந்த போட்டி வரும் 22ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒரு அணிக்கு 3 பெண்கள், 3 ஆண்களுடன் 2 உபரி வீரர்களும் கலந்து கொண்டு விளையாடுகிறார்கள். இந்த விளையாட்டுப் போட்டி ராயப்பேட்டையில் உள்ள அமிர் மஹாலில் நடைபெறுகிறது. வரும் 20ம் தேதி முதல் குழந்தைகள் பயிற்சியில் ஈடுபட்டு விளையாட உள்ளனர்.

The post தெருவோர குழந்தைகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியை நீதிபதி அறிமுகப்படுத்தினார் appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Judge ,Vaidyanathan ,World Cup cricket ,Chennai ,cricket team ,Dinakaran ,
× RELATED மாநகர பேருந்து படியில் பயணம்; ‘உள்ளே...